Sunday 24 April 2011

ஸ்பெயின் கிளம்புகிறார் சிம்பு

சிம்புவின் ஆக்டோபஸ் அறிவுக்கு தீனி போடுகிற படமாக இருக்கும் "போடா போடி".
ஏனென்றால் "நாம்கிவாஸ்" டைரக்டர்களுடன் பணி புரிவது தான் சிம்புவுக்கு பிடித்த விஷயம்.

தனது திரைப்பட அறிவை சீனுக்கு சீன் புகுத்த வேண்டும் என்றால் சொல்வதை கேட்கிற இயக்குனர்கள் தான் சரி என்று நினைப்பார் சிம்பு. அப்படி இவரது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிற படமான போடா போடியில் நிறைய தொழில் நுட்பங்கள் புகுத்தப்பட்டிருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

ஆனால் படத்தை எடுத்தோம், சுருக்கென முடித்தோம் என்றில்லாமல் இழுவையாய் இழுத்துக் கொண்டிருக்கிறார் சிம்பு. இடையில் வானம் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டவருக்கு மீண்டும் போடா போடி ஞாபகம் வந்துவிட்டது.

இந்த படக்குழுவுடன் இன்று ஸ்பெயின் கிளம்புகிறார் சிம்பு.

No comments:

Post a Comment