Monday 2 May 2011

ஒரு படம் முடிவதற்குள் அடுத்தப் படத்தை முடிவு செய்த ஜெயம் ரவி

'தாம் தூம்', 'தில்லாலங்கடி' போன்ற வெற்றி படங்களில் நடித்த ஜெயம் ரவி தற்போது நடிக்கும் படம் 'ஆதிபகவான்'.
ஆதிபகவான் படத்துக்காக தாடி மீசையுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார் ஜெயம் ரவி.

படத்தை இயக்குவது அமீர் என்பதால் அழகைப் பற்றியெல்லாம் அவர் அலட்டிக் கொள்ளவில்லை.

ஒரு படம் முடியும் முன்பே அடுத்தப் படத்தை முடிவு செய்யும் நடிகர்களில் இவரும் ஒருவர்.

ஆதிபகவானுக்குப் பிறகு எந்தப் படத்தில் நடிப்பது என்பதை ஜெயம் ரவி தீர்மானித்துள்ளார்.

யோகானந்த் என்ற அறிமுக இயக்குன‌ரின் 'பூலோகம்' என்ற படத்தில் நடிக்கயிருக்கிறார் ஜெயம் ரவி. ஆக்சன் பின்னணியில் இப்படம் தயாராகவுள்ளது.

No comments:

Post a Comment