'அவன் இவன்' படம் முடிந்து விட்ட நிலையில், இப்போது பிரபுதேவா இயக்கத்தில் நடித்து வருகிறார் விஷால். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஷமிரா ரெட்டி நாயகியாக நடித்து வருகிறார்.
தெலுங்கில் வரவேற்பை பெற்ற 'செளரியம்' என்னும் படத்தின் ரீமேக்காகும். இப்படத்தை தெலுங்கில் இயக்கியவர் சிவா. தமிழில் 'சிறுத்தை' படத்தை இயக்கியவர்.
இன்னும் பெயர் கூட வைக்காத நிலையில் 80% படத்தை முடித்து விட்டாராம் பிரபுதேவா. இந்த படத்தின் பெயர் 'பிரபாகரன்' அல்லது 'பிரபா' என எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில், பிரபுதேவா இயக்கிய படத்திற்கு 'இச்' என்று தலைப்பு வைத்து, வரிவிலக்கு கிடைக்காது என்பதால் 'எங்கேயும் காதல்' என பெயர் மாற்றப்பட்டது.
இப்படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் ஹைதராபாத் அருகில் ஒரு இடத்தில் படமாக்கி வருகிறார்கள். இப்படத்தில் விவேக்கின் காமெடி காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன என சொல்கின்றனர் படக்குழுவினர்.
80% சதவீதம் படம் முடிவடைந்து விட்டதால் ஆகஸ்ட் மாதத்திற்குள் இப்படத்தை வெளியிடலாம் என்கின்ற முனைப்புடன் பணியாற்றி வருகிறார்களாம்.
இந்த படத்திற்குப் பிறகு அக்ஷய் குமார் நடிக்க சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் பிரபுதேவா.!
View lots of updates in tamil cinema and latest tamil movie news,actors and actress news here
Tuesday, 3 May 2011
விஷால் சமீரா ரெட்டி நடிக்கும்.......?
There are no comments posted yet. Be the first one!
Comments by IntenseDebate
Posting anonymously.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment