Friday, 29 April 2011

மீண்டும் ரீமா

போனவர்களுல் ஒருவர் படத்தின் நாயகியானார் ரீமா சென்.

மற்றொருவர் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன்.

இரண்டாமவர் திரும்ப வருவது கஷ்டம் என்பதால், அந்த விவகாரத்தை பின்னர் பார்க்கலாம் என்று விட்டுவிட்டனர்.

கிட்டத்தட்ட ஓராண்டு காலமாய் தெற்குப் பக்கமே தலைவைத்துப் படுக்காமலிருந்த ரீமா, இப்போதுதான் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதுவும் மிகுந்த முயற்சியின் பலனாக கிடைத்ததாம். ஆனால் தமிழில் இல்லை, தெலுங்கில். டி ராமாநாயுடு தயாரிக்கும் இந்தப் படத்தை ஆதித்யா இயக்குகிறார்.

இதில் மூன்று நாயகர்கள் அறிமுகமாகிறார்களாம். ஆனால் ரீமா மட்டும்தான் நாயகியாம். மலேசியாவில் ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடக்கிறதாம்.

மலையாளப் படங்களில் நடிக்கவும் தயார் என அறிவித்துள்ளார் ரீமா.

சில மாதங்களுக்கு முன் மும்பையில் நள்ளிரவு விருந்து ஒன்றில் காதலருக்கு மோதிரம் அணிவித்து ரீமாவின் நிச்சயதார்த்தம் நடந்தது நினைவிருக்கலாம். ஆனால் திருமணம் நடக்கவில்லை. மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தப் போகிறாராம் ரீமா.

No comments:

Post a Comment