'ராணா' படம் துவங்கவிருப்பதையொட்டி சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினி சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு அடிக்கடி செல்வது வழக்கம. 'பாபா' படத்தின் பெரும் பகுதி காட்சிகள் காளிகாம்பாள் தெய்வத்தை சார்ந்தே இருந்தன. அந்த படத்தில் இடம்பெற்ற 'சக்தி கொடு' என்ற பாடலே, காளிகாம்பாள் சிலை முன்பு பாடப்படுவது எடுக்கப்பட்டது நினைவிருக்கலாம். மராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜி இந்த கோவிலில் தனது வாளை வைத்து வழிபட்டான் என்பது வரலாறு.
ரூ 100 கோடி பட்ஜெட்டில், மிக பிரம்மாண்டமாக 'ராணா' படப்பிடிப்பு துவங்கும் நிலையில் ரஜினி காளிகாம்பாள் கோவிலுக்கு திடீரென வந்தார். அங்கு பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். காளிகாம்பாளுக்கு சிறப்பு அர்ச்சனைகளும் செய்தார். பின்னர் கோவிலை சுற்றி வந்து வணங்கி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். எந்தக் காரியத்தைத் தொடங்கும்போதும் தனது குருக்கள் மற்றும் தெய்வத்தை வழிபட்டுவிட்டே ஆரம்பிப்பது ரஜினியின் வழக்கம். இதனை பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறார். அடுத்தவாரம் துவங்கும் 'ராணா' படப்பிடிப்பு வெற்றிகரமாக நடக்க வேண்டி இந்தப் பிரார்த்தனை நடந்தது, என ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கூறினர். மலையே மணலாகும்போது... மனுஷனுக்கு செண்டிமெண்ட் தானே துணை!
No comments:
Post a Comment