ஒரு சாதரண பத்திரிகை புகைப்படக்காரர் தலையில் நாட்டை யார் ஆள வேண்டும் என்ற பொறுப்பு வந்தால் என்ன செய்வான் என்பதுதான் இந்த படத்தின் கதை.
கே.வி.ஆனந்த்-சுபா கூட்டணியில் வெளியாகி இருக்கும் மூன்றாவது படம் தான் 'கோ'. 'கனா கண்டேனில்-கந்து வட்டியையும் 'அயனில்-கடத்தல் தொழிலையும் கருவாக எடுத்துக் கொண்ட ஆனந்த் இந்தப் படத்தில் வெகு தைரியமாக தற்கால அரசியலைப் பேசி இருக்கிறார். இத்தனை தெளிவான, தீர்க்கமான அரசியல் படம் எதுவும் சமீபத்தில் வெளிவந்ததாகத் தெரியவில்லை.
ஹாரிஸ் இசை கேட்க நன்றாக இருக்கிறது, காரணம் பா.விஜய், மதன் கார்க்கியின் அருமையான பாடல் வரிகள்தான்! பாடல்கள் எடுத்த விதம் இன்னும் ஒரு படி மேல ரசிக்க வைக்கிறது. சில இடங்களில் பின்னணி இசை மிக வித்தியாசமாக இருந்தது. ஆனால் ஒரு இடத்தில் டைட்டானிக் இசையை நினைவுப்படுத்துகிறது.ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன், கே.வி.
ஆனந்தின் கண்ணாக மிக நேர்த்தியாக உழைத்து இருக்கார். இவர் ஏற்கனவே 'அங்காடித் தெரு', 'பாணா காத்தாடி'யில் பணிபுரிந்திருந்தாலும் இந்த படத்தில் இவரின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. பீட்டர் ஹெய்னின் சண்டைக்காட்சி உருவாக்கத்தில் இறுதிக்காட்சியில் வரும் சண்டை மிக துல்லியமாக எடுக்கப்பட்டுள்ளது. கலை இயக்குநர் கிரண் நன்றாக செய்துள்ளார். சின்ன சின்ன காட்சிகளுக்கும் டீட்டைலிங் அற்புதம்.
ஒவ்வொரு காட்சியும் படத்தில் அவ்வளவு அழகு. இயக்குநர் கே.வி. ஆனந்திற்கு சிறப்பு வாழ்த்துகள். நிறைய உழைத்து இருப்பார் போல... ஒரு ஜனரஞ்சக படத்தில் இத்தனை உழைப்பு அருமை.
No comments:
Post a Comment