‘மாப்பிள்ளை’க்குப் பிறகு கோலிவுட்டின் டாப் ஹீரோயின் ஆகியிருக்கிறார் ஹன்சிகா. அம்மணியின் கால்ஷீட்டுக்கு இப்போது பெரிய லைன். ‘மாப்பிள்ளை’ படம் பார்த்தவர்கள் என் நடிப்பை பாராட்டுகிறார்கள். பட ரிலீஸ் வரை மனம் திக் திக் என்றே இருந்தது. பயந்துகொண்டே இருந்தேன். ஆனால் ரிலீசுக்குப் பிறகு தமிழ் ரசிகர்கள் என்னை தங்கள் வீட்டுப் பெண் போல் ஏற்றுக்கொண்டதை நினைத்து பெருமையாக இருக்கிறது. தொடர்ந்து, நல்ல கேரக்டர்களில் நடித்து பெயர் வாங்க வேண்டும் என்பது என் லட்சியம்’ என்கிறார் ஹன்சிகா.
எங்கேயும் காதல்?
அழகான காதல் கதை. காதல் இல்லாம உந்த உலகத்துல எதுவும் இல்லை. காதல்தான் எல்லாத்துக்கும் முக்கியமானதா இருக்குது. இந்தப் படத்துல இந்தியாவுல இருந்து பாரிஸ் வர்ற ஜெயம் ரவி மேல, அங்கேயே இருக்கிற எனக்கு காதல் வருது. இந்த காதல் என்னாவாகுது? ஒண்ணு சேர்றோமா, இல்லையாங்கறதுதான் கதை. ஜாலியா, பரபரன்னு இருக்கும். ஜெயம் ரவி செட்ல எனக்கு நிறைய உதவி பண்ணினார். நல்ல நடிகர். அதிகமா ஜோக் சொல்லிட்டே இருப்பார். அவரோட நடிச்சது நல்ல அனுபவம்.
பிரபுதேவா இயக்கத்துல நடிச்சது எப்படியிருக்கு?
அவர் சிறந்த கோரியோகிராபர்னு எல்லாருக்கும் தெரியும். இந்தியில அவர் இயக்கிய ‘வான்டட்’ பெரிய ஹிட். அதுக்கு முன்னால அவரோட நடனங்களை பார்த்து பிரமிச்சிருக்கேன். நான் அவரோட ரசிகை. அவர் இயக்கத்துல நடிக்க வாய்ப்பு வந்திருப்பது எனக்கு கிடைச்ச லக்குனு சொல்வேன்.
படத்தோட மொத்த ஷூட்டிங்கும் பாரிஸ்ல நடந்திருக்கு?
ஆமா. இதுவரை படமாக்கப்படாத புது லொகேஷன்கள்ல பிரபுதேவா ஷூட் பண்ணியிருக்கார். ஒவ்வொரு இடமும் பளிச்சுனு இருக்கும். இந்தப் பட ரிலீசுக்குப் பிறகு, ‘அந்த லொகேஷன் எங்க இருக்கு; இந்த லொகேஷன் எங்க இருக்கு’ன்னு கேட்டு நிறைய டைரக்டர்கள், தங்களோட படத்தை கண்டிப்பா இங்க ஷூட் பண்ணுவாங்க. அந்தளவுக்கு ரிச்.
தொடர்ந்து 15 மணிநேரம் ஷூட்டிங்ல கலந்துக்கிட்டீங்களாமே?
பாரிஸ்ல தொடர்ந்து சில நாட்களா மழை பெய்துட்டே இருந்தது. ஷூட் பண்ண முடியலை. ஏற்கனவே போட்ட ஷெட்யூல்படி எங்களுக்கு தாமதம் ஆச்சு. உடனே, மழை விட்டு லேசா மேகம் மறைஞ்சதும் தொடர்ந்து 15 மணி நேரம் ஷூட்டிங் நடத்தி 3 நாள் இடைவெளியை சரி கட்டினோம். அது வித்தியாசமான அனுபவமா இருந்தது.
அடுத்து?
உதயநிதி ஸ்டாலின் ஜோடியா, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, விஜய் ஜோடியா ‘வேலாயுதம்’ படங்கள்ல மதுரை கிராமத்து பெண்ணா நடிக்கிறேன். இது தவிர இரண்டு தெலுங்கு படங்கள்ல நடிச்சிட்டிருக்கிறேன்.
No comments:
Post a Comment